வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும் என்று வட மாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் வட மாகாண சபையில் யாப்புக்கு முரணான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்காகவே தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எதுவித இணக்கப்பாடும் கிடையாது என அவர் குறிப்பிடுள்ளார்.(ou)