Breaking
Sun. Dec 22nd, 2024

தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதற்காகவும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் புதிய பொலிஸ் அவசர அலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்தப் புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 0766 224949 மற்றும் 0766 226363 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்வதன் மூலம் தமிழில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நடவடிக்கை வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

By

Related Post