Breaking
Mon. Dec 23rd, 2024

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியுயேற்றம் மற்றும் அதற்கான தடைகளை அகற்றுதல் தொடர்பில் ஆராய அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் குழுவொன்றினை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி இரு வாரங்களுக்குள் இக் குழு போதுமான கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையுடன் தன்னை சந்திக்குமாறு பணிப்புரைவிடுத்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி அமைச்சரவையிலும்,அதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச இயந்திரத்தினது பார்வை போதுமானதாக இல்லை என்பதை கடும் வேதனையுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நேற்று 11 ஆம் திகதி புதன்கிழமை கலந்துரையாடலுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.இதன் போது மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது –
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அண்மையில் அமைச்சர் சுவாமி நாதன் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என்றும்,வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற வேண்டும் என்று தம்மை பதிவு செய்த போதும்,துரிதிஷ்டம் அவர்களுக்கு தேவையான அடிப்டை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமையினால் அங்கிருந்து மீண்டும் அவர்கள் வாழ்ந்த தற்காலிக பிரதேசங்களுக்கு சென்றுள்ளது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் புள்ளி விபரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே போல் கடந்த 3 வருட காலமாக முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசால் வழங்க தீர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு காணிகளை வழங்கவிடாது மேற்கொள்ளப்பட்ட சதிகள் தொடர்பில் இற்கு ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன்,யாழ்ப்பாபணத்தில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு 1000 வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும்,அவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள தேவையான காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படாமையினால் அவைகளும் கிடைக்காமல் போனது தொடர்பில் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு மாறறு காணிகள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்ட போதும்,அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது இந்த மக்களது மீள்குடியேற்றத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும்,அதே போல் சிலாவத்துறை என்பது முசலியின் தலை நகரமாகும்,அங்கும் மையப்பகுதியில் உள்ள காணிகள் கடற்படையினரின் தேவைகளுக்காக பெறப்பட்டுள்ளதால் அந்த மைத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமின் மாற்று இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு விளக்கப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இரு மாதங்களுக்கு ஒரு தடவை இந்த குழு மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதென்றும்,எதிர் காலத்தில் இந்த மீளகுடியேற்றத்தினை வெற்றி பெறச்செய்ய எடுக்கப்பட வேண்டிய திட்டமிடப்பட்ட நடவடிக்ககைள் தொடர்பில் இந்த குழு கூடி ஆலோசனைகளை தமக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற முடிவும் எட்டப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கையில் –
இந்த கூட்டத்தில் பல்வேறுபட்ட முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாகவம்,இதில் வடக்கு,கிழக்கு ஆளுநர்கள் உட்பட் அமைச்சர்கள்,மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும்,ஜனாதிபதியிடம் என்னால் முன் வைக்கப்பட்ட கோறிக்கைகளை சாதகமான முறையில் செயற்படுத்துவது தொடர்பில் சில நடவடிக்கைகள் உடன் எடுத்துள்ளதாகவும் கூறினார்.

நிறைவு
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்ற வடபுல முஸ்லிம்களின் 25 வருடம் நிறைவுற்றுள்ள நிலையில் இன்னும் இம்மக்களின் கௌரமான மீள்குடியேற்றம் தொடர்பில் ஆய்வுகள் மட்டும் இடம் பெறுவது என்பது காலத்தினை நகர்த்தும் செயலாகுமா என்ற கேள்வி எழும் நிலையில்,அமைச்சர் றிசாத் பதியுதீன் வடபுல சமூகத்தின் பிரதி நிதி என்ற வகையில் தற்போது அவர் எடுத்துள்ள இந்த காத்திரமான முன்னெடுப்பு இன்னும் சில வாரங்களில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதற்கான நல்லதொரு சமிக்ஞ்சையினை காட்டியுள்ளதாக வடபுல முஸ்லிம்களும்,அந்த சமூகத்தின் புத்தி ஜீவிகளும் கருதுவதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

By

Related Post