ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வறுமை மற்றும் போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய படையெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் மட்டும் ஐரோப்பாவுக்குள் 5 லட்சம் அகதிகள் நுழைந்துள்ளதால், தற்போது எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எண்ணிக்கையே இல்லாமல் அகதிகளை ஏற்றுக்கொண்டே இருக்கமுடியாது என நேற்று ஸ்லோவேனியா அறிவித்ததையடுத்து, பால்கன் பகுதி நாடுகளுக்கு செல்லும் பாதையில் இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் குரோஷியாவுக்கு தெற்கு உள்ள செர்பியாவில் அகதிகள் நிரம்பிவழிகின்றன, இதனால் அவர்களுக்கு பல மணிநேரங்களாக பணிபுரிந்து வரும் பொலிசுக்கும் இடையே சண்டைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.