Breaking
Tue. Dec 24th, 2024
வத்தளை அவரகொட்டு பகுதி மக்கள் நேற்றிரவு (07) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றினால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வத்தளை, ஹெந்தலை, அவரகொட்டுவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றிலிருந்து வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் புகையினால் சூழல் பாரியளவில் மாசடைவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமது சுகாதார நிலைமை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சூழல் மாசடைவது தொடர்பில் தொழிற்சாலை முகாமைத்துவம் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்த போதிலும், தமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் இன்று காலை முதல் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

By

Related Post