Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற ஒரு முஸ்லிம் மாணவன் பௌத்த பிக்குவாக மாறிய சம்பவம் ஒன்று வத்தள, என்டரமுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கொழும்பு ஸாஹிரா கல்லூரி நிர்வாகஸ்தர் ஒருவரிடம்  வினவிய போது அவர் பின்வருமாறு உறுதிமொழி அளித்தார்.

“இம்மாணவனுக்கு சமூகத்தில் மற்றும் உலகளாவிய ரீதியில் தான் பிரபல்யம் பெற்று தனது பெயர் முழு உலகிலுமே அறிமுகமாக வேண்டும் என்ற ஒரு பேராசையும் கணவும் பாடசாலை பருவம் தொடக்கமே இருந்து வந்துள்ளது.

இவரது கனவுகளை நனவாக்க வேறு வழிகளில் முயற்சி செய்த இவர் அவைகளை அடைய முடியாத காரணங்களால் இது போன்று ஒரு பௌத்த துறவியாக மாறி இருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னைய காலங்களில் இதற்காக இவர் ஒரு கிறிஸ்தவராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி காத்தான்குடி நியூஸ்)

-மொஹம்மத் முஸைப்-

Related Post