கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை எனத் தெரிவித்து இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிரிபத்கொட பொலிஸாரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்வதற்கும் நிர்மாணத்திற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆர்.ஆர்.டி சட்ட ஆலோசனை அமைப்பு, இந்த வழக்கிற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக போராடியதுடன் இந்த பள்ளிவாசல் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்று மஹர நீதிமன்த்தில் இடம்பெற்ற போது, குறித்த வழக்கு நீதவானினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்ரி குணரத்ன, சிராஸ் நூர்தீன் மற்றும் நிராஷ கமகே ஆகியோர் பள்ளிவாசல் சார்பாக நீதிமன்றில் ஆஜராகினர்.