Breaking
Tue. Jan 7th, 2025

– ரிமாஸ் – 

வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07) இரவு கடைக்குள் சென்ற நபர் யுவதியை வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை – ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையில் வசிக்கும் 19 வயது முஸ்லிம் யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையை புரிந்த இளைஞன் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொண்டு படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

காதல் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Post