Breaking
Sun. Dec 22nd, 2024

மஹியங்கனை கண்டி வீதியில் 18 வளைவுகள் உள்ள பிரசித்தமான இடத்திற்கு அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீபரவியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி காட்டுத்தீ 18 வளைவுகளைக் கொண்ட இடத்தில் உள்ள 17 வது வளைவிற்கு சமீபமாக இடம்பெற்றுள்ளதாக ஹஸலக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குருலுபொத்த என்ற இடத்திலிருந்து பிட்டதுன்ன என்ற இடத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தீபரவியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

முப்படைகளில் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post