Breaking
Mon. Dec 23rd, 2024
“வனரோபா” தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மன்னார், மடு, தம்மனைக்குளத்தில் இன்று (05) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, மகிந்த அமரவீர, கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், ஸ்ரீயானி விஜேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், அரச உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Related Post