எமது மக்களுக்கு இந்த அரசியல் அதிகாரங்களை கொண்டே அனைத்தையும் செய்ய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் (யானைச் சின்னத்தில் போட்டியிடும்) அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வேட்பு மனுத்தக்கல் செய்த பின்னர் வவுனியாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார்.
வன்னி மாவட்டத்தில் நாம் புதிய அரசியல் காலாசாரத்தை தோற்றுவித்து செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் சில அரசியல் வாதிகள் அந்த கலாசாரத்தை அகற்ற முனகைின்றனர்.அது அவர்களது கனவு என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாம் எதை மக்களுக்கு செய்தாலும் சில இனவாதிகன் ஒன்று சேர்ந்து அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.
இந்த சக்திகளுக்ககு இந்த தேர்தல் நல்லதொரு பாடத்தை புகட்டும் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 3 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளும் எனவும் கூறினார்.
அத்தோடு மட்டுமல்லாமல் எமது வெற்றியின் ஊடாக இந்த மாவட்டத்தில் எல்லா சமூகங்களும் நன்மையடையும் செய்பாடுகளே முன்னெடுக்கப்படும்.இன்று இந்த வன்னி மாவட்டம் ஏனைய மாவட்டங்களுககு முன்னுதாரணமாக இருக்கின்றது.எமது வேட்பாளர் பட்டடியில் அதனை நீங்கள் பார்க்கலாம்.ஆனால் சிலர் இந்த சிறுபான்மை சமூகத்தினை அழித்து அவர்களை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு நாம் சொல்லும் விடயம்,நீங்கள் ஊடகத்தினை வைத்துக்கொண்டு எனக்கெதிராக நீங்கள் முன்னெடுப்பது இனவாத பிரசாரமாகும்.அது தொடர்பில் எமது மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். என்றும் சுட்டிக்காட்டினார்.
வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் கச்சேரிக்கு முன்பாக தொழிலதிபரும்,பிரபல சமூக சேவைாயளருமான எம்.அமீன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.