ரஸீன் ரஸ்மின்
மன்னர் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. யுhழ் புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் முழுதும் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் பேசப்பட்டது. இதனால் வில்பத்து விவகாரத்திற்கு ஒருவார காலம் ஓய்வு கொடுக்கப்பட்டது.
எனினும் வித்தியா தொடர்பில் நாட்டில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டதும் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு நினைத்தபடி ஆடிக்கொண்டிருக்கின்ற இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களை அடக்கி ஒடிக்கி வைத்துக்கொண்டு தாம் நினைத்தபடி ஆட்டுவதற்கு முயற்சித்தது இப்போது ஒன்றும் புதிய விடயமாகப் பார்க்க முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் காலத்தில் கூட இந்த இனவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆதனை மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் முக்கியம். எடுத்தேன், கௌத்தேன் என்று இல்லாமல் தனது சாதூர்யமான பேச்சு ஆற்றலினால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளை அப்படியே நசுக்கிப் போட்டார்.
அந்த வகையில் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் மர்ஹூம் அஷ்ரப் அன்று குரல்கொடுத்தார். மர்ஹூம் நூர்தீன் மசூர் குரல் கொடுத்தார். ஆனால் இன்று இந்த மக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கக் கூடிய ஒரு தலைவர் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மாத்திரமே என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வடக்கு முஸலிம்களின் போராட்டம் வித்தியாசமானது. ஆவர்கள் தமது சொந்த மண்ணில் வாழுவதற்கான உரிமை கேட்டு கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் ஏதோ ஒரு காரணத்திற்காக வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றங்கள் புறந்தள்ளப்பட்டே வருகிறது.
ஒரு குறுகிய காலத்திற்கும் இடம்பெயர்ந்த வடபுல மற்றும் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுளள்னர். ஆனால் இலங்கை அரசில் முஸ்லிம் ஒருவர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து தனது சமூகத்தை (வடபுல முஸ்லிம்களை) சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யவில்லை என்பது அங்கு இனவாதங்கள் தலைதூக்கவில்லை என்பதற்கு அதுவே ஒரு ஆதாரமாக இருக்கிறது.
வடபுல முஸ்லிம்களின் போராட்ட உணர்வை எந்த அரசாங்கத்தினால் அல்லது அரசியல்வாதிகளினால் புரிந்துகொள்ள முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதாகச் சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருந்தது. அது போல புதிய அரசும் மஹிந்த ராஜபக்ஷவின் பாணியை கையாளப் போகிறதா என்று; வடபுலத்தில் வாழும் உரிமைகளுகக்காக போராடும் முஸ்லிம்களின் உள்ளங்களில் சந்தேகங்கள் தோன்றியிருக்கிறது.
இந்த வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்களில் புதிய அரசும் கையை விரித்து விடுமோ என்ற அச்ச உணர்வு அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது அறிக்கைகள் கருத்துக்கள் இந்த செய்தியையே தொக்கி நிற்கிறது. வுpல்பத்து விவகாரத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று நாட்டின் ஜனாதிபதியும், இதுபற்றி ஜனாதிபதி பார்த்துக்கொள்வார் என்று பிரதமரும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
பொறுப்புள்ள நாட்டின் பிரதமர் பொறுப்பற்ற முறையில் எவ்வாறு பதில் சொல்ல முடியும். ஆண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரதமரிடம் கேள்வியெழுப்பியுயுள்ளார்.
இதன்போதுதான் பிரதமர் ஜனாதிபதிதான் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். ஆதனால்தான் தலையிடவில்லை என்று பொறுப்பற்ற பதிலைச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு பிரதமரின் கருத்து முஸ்லிம் மகக்ளிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் வாழும் குறிப்பாக வடபுல முஸ்லிம்கள் இந்த நாட்டில் எதையும் பங்கு கோரவில்லை. தனி நாடு கேட்கவில்லை. தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவிடுங்கள் என்ற செய்தியைதான் இந்த அரசிடம் கேட்கிறார்கள்.
கடந்த அரசாங்கத்தினால் திருமலை சம்பூர் கிராம மக்களின் பெருந்தொகையான நிலங்கள் முதலீட்டு உள்ளிட் தேவைகளுக்காக மஹிந்த அரசு கையகப்படுத்தி வைத்துக்கொண்ட போது சம்பூர் மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அந்த போராட்டங்களுக்கு புதிய அரசு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது.
ஆந்த மக்கள் என்ன தேவைகளுக்காக போராடினார்களோ அவர்களின் தேவைகள் இன்று புதிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அவர்கள் இடம்பெயர்ந்து வெறும் பத்து வருடங்கள்தான் இருக்கும். பத்து வருடங்களாக காடுகளாக காட்சியளித்த தமது காணிகi துப்பரவு செய்யும் பணியை கடந்தவாரம் முன்னெடுத்திருக்கிறார்கள்.
ஆனால் 25 வருடங்களுக்கும் மேலாக தமது சொந்த மண்ணில் மீளகுடியேறாமல் அத்தனை உரிமைகளும் மறுக்கப்படுகின்ற ஒரு சமூகமாக வடபுல முஸ்லிம்கள் இன்று அந்த வேதனையை அனுபவித்துக்கொணடிருக்கிறார்கள். தமது சொந்த ஊருக்கு சுற்றுலா பயணிகளைப் போல காலையில் சென்று மாலையயில் திரும்புகின்ற ஒரு துர்பாக்கிய நிலையில் எந்த சமூகமும் அனுபவித்திராத கஷ்டங்களை இந்த வடபுல முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல ஒரு சந்தர்ப்பம்
வில்பத்து விவகாரம் தொடர்பில் இனவாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக முன்வைத்துவந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்;பில் தொடர்ச்சியாக வன்னி முஸ்லிம்கள் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதனுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டுவந்த சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றில் தமது பக்க நியாயயமான கருத்துக்களை விலபத்து குடியேற்ற தெளிவுகளை வழங்குவதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு குறித்த தொலைக்காட்சி சந்தர்ப்பமொன்றை வழங்கியிருந்தது.
குறித்த தொலைக்காட்சியில் வாரம் நடைபெறும் அரசியல் அலசல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை மிகவும் தைரியத்துடன் எதிரணியினர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை காட்டி வன்னி முஸ்லிம்களின் பக்க நியாயங்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனால், இந்த நிகழ்ச்சி இனவாதங்களை கட்விழ்த்து விடுகின்றவர்களுக்கு நல்லதொரு தெளிவுகளை பெற்றுக்கொடுத்திருக்கும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
வுpல்பத்துவில் சட்டவிரோத முஸ்லிம்கள் சட்டரீதியாகவே குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். ஆப்படி அவர்கள் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யப்பட்டது என்றால் அதுபற்றி நீதிமன்றில் வழங்கு தொடரலாம் என அமைச்சர் ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார்..
இவ்வளவு காலமும் எதிரணியினர் அல்லது இனவாதங்களை அள்ளிவீசுகின்றவர்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மன்னார் மரிச்சிக்கட்டி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சட்டரீதிhயானது என்று தன்னந்தனியாhக நின்று போராடியது வடபுலத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மாத்திரமின்றி, குறிப்பிட்டு சொல்லக்கூடிய மூவின மக்கள் மத்தியில் கண்கலங்க வைத்திருந்தது.
இந்த அரசியல் நிகழ்சியால் இனவாதிகள் அல்லது இனவாத அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கள், விமர்சனங்களினால் முஸ்லிம்கள் மீது இருந்துவந்த ஒரு வித்தியாசனமான பார்வை இப்போது நீங்கியிருக்கும் என நம்புகிறேன்.
ரிசாதை கைது செய்யுங்கள் இல்லையேல் எம்மிடம் ஒப்படையுங்கள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதூங்க ஆட்சிக்காலத்தில் அப்போது முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்து வந்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப். ஆந்த ஆட்சிக்காலத்தில் கூட சிஙகள வீரவிதான எனும் இனவாத அமைப்பு ஆட்டம் காட்டியது. ஆதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொதுபலனே ஆடியது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியில் சிங்கள ராவய, ராவணா பலய உள்ளிட்ட அமைப்புக்கள் எல்லை மீறி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
வுன்னி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை மிகவும் கச்சிதமாக தடுப்பதற்கு மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் கைவைப்பதற்கு எதிராக குரல்கொடுத்து வருகின்ற அமைச்சர் ரிசாதின் குரலை நசுக்க வேண்டும் என்பதற்காக அவர்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை கைது செய்யுமாறு இனவாத அமைப்பு குறிப்பிட்டு வருகிறது.
ஆமைதி, சமாதானம், சமத்துவம் என்பவற்றை போதிக்கும் பௌத்த மதப் போதனைகளை கற்ற சாதுக்கள் இப்படி நடந்துகொள்வது பௌத்த தர்மத்திற்கே பெரும் இழுக்காகும்.
தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக ஒரு சமூகத்தன் மனதை புண்படுத்துவது, அவர்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பது ஒருபோதும் ஏறறுக்கொள்ள முடியாததாகும். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வன்னி முஸ்லிம்களுக்கு ஆதராவாக குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் செற்படுகிறார்களா?
ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ விமான நிலையம், வவுனயாவில்; நாமல்கம, வெளிஓயாவில் சிங்களக் குடியேற்றங்கள், தம்புள்ளை விளையாட்டு மைதானம் என எண்ணிக்கொண்டு சொல்லக்கூடிய அபிவிருத்தி பணிகளை செய்த மஹிந்த அரசின் காலத்திலேயே இந்த மரிச்சிக்கட்டி முஸ்லிம்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த முஸ்லிம்கள் காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலங்ககளில் முன்னெடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ விமான நிலையம், வவுனயாவில்; நாமல்கம, வெளிஓயாவில் சிங்களக் குடியேற்றங்கள், தம்புள்ளை விளையாட்டு மைதானம் இவையனைத்தும் காடுகளையே அழிக்கப்பட்டு அங்கு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனவே, வில்பத்து விவகாரத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் மேற்சொன்ன விடயங்களையும் தூக்கிப்பிடிக்க வேண்டும். ஏன் வவுனியா மக்களுக்கு, ஹம்பாந்தோட்டை மக்களுக்கு ஒரு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டி அதற்கு எதிராகவும் உங்களது அமைப்பு ஏன் குரல் கொடுக்கவில்லை?
காட்டில் மிருகங்கள் வாழ்வதற்கு உரிய உரிமை இலங்கையில் இருக்கிறது. ஆனால் மக்கள் வாழ்வதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. இலங்கையில் வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். மிருக இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கிய இடத்தை பெறுகின்ற போதிலும் மிருகங்களுக்காக கொடுக்கின்ற மரியாதையில் சிறிதுகூட மன்னார் மரிச்சிக்கட்டி முஸ்லிம்களுக்கு இல்லை என்பது எந்த வகையில் நியாயமாகும்.
எனவே, வாழ்விட உரிமை கோரி நிற்கும் வன்னி முஸ்லிம்களுக்கு உதவி செய்கின்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் சட்டவிரோமாக ஏதும் செயற்பட்டு தனது மக்களை மீள்குடியேற்றம் செய்தால் அவருக்கு எதிராக நீதிமன்த்தில் வழக்கை தொடுத்து அதன் மூலம் நிதிக்காக போராடுவதை விட்டுவிட்டு வன்னி முஸ்லிம்களின் மீளுகடீயற்றத்தை தடுக்கும் நொக்கில் ஒருபோதும் செயற்படவேண்டாம் என என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு கட்சி வேறுபாடின்றி, செயற்படுவது காலத்தின் தேவையாகும். ஆனர்த்தமொன்று வரும் போது அங்கு இனம், மதம், பிரதேசம் என்று பார்ப்பதில்லை. பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு எல்லோரும் ஒன்றினைந்தே உதவி செய்வது வழக்கமாகும்.
ஆங்கு நான் இன்ன கட்சியைச் சேர்ந்தவன், இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்று பிரித்து பார்ப்பது கிடையாது. ஆவ்வாறு பிரித்து பார்ப்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளாகும். எனவே, விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அல்லது அவர்கள் நினைத்தபடி ஆடுவதற்கு வன்னி முஸ்லிம்கள் ஒத்துழைப்புக்கள் வழங்கவில்லை என்பதற்காக அவர்களை உடுத்த்p உடையுடன் மாத்திரமே தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற்றினார்கள்.
சொந்ந மண்ணை விட்டு வெளியேற்றிய போது வன்னி முஸ்லிம்கள் நடையாக சென்ற போது அவர்களுக்கு ஒருசொட்டுத் தண்;ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று புலிகளினால் மக்களுக்கு உத்தரவிட்பட்டிருந்தது. எனினும் பல சிரமங்கள், அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது சொந்த மண்ணை விட்டு nவியேறிய வன்னி முஸ்லிம்கள் சமாதானத்தின் பின்னர் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற செல்கின்ற போது அதற்கு தடைவிதிப்பது அல்லது அதற்கு எதிராக குரல் கொடுப்பது மனிதாபிமானமற்ற செயலாளகும்.
எனவே, இந்த விடயத்தில் அரசியலை பார்க்காமல் சமூக நலனுக்காக அந்த மக்களின் எதிர்காலத்திற்காக கட்சி பேதங்களை மறந்து செயற்பட வேண்டும். தோடர்ந்தும் வன்னி முஸ்லிம்;களின் மீள்குடியேற்றம் பந்தாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் வருடாந்த மாநாட்டில் இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, வடபுல முஸ்லிம்;களின் கௌரவமான மீள்குடியேற்றத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புக்கள் உடன் தலையிட்டு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி அந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.