Breaking
Sun. Dec 22nd, 2024

– அப்துல்லாஹ் –

வீட்டிலிருந்த 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென அவளது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா ஷிரோமினா (வயது 14) என்ற சிறுமியே செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளார். தொழிலுக்காகச் சென்ற பெற்றோர் வீடு திரும்பிய போது சிறுமி வீட்டிலிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Post