கிருஷ்ணி இபாம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது.
ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும.;
இன்று (28) காலை சினமன் கிராண்;ட் ஹோட்டலில் முதல் முறையாக இலங்கையில் நடைபெற்ற உலக றப்பர் மாநாட்டின்; அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்; பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ , சர்வதேச றப்பர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சபையின் பொது செயலாளரும் மலேஷியா ‘ஊழகெநஒhரடி’ சர்வதேச றப்பர் நிகழ்ச்சி அமைப்பின் தலைவருமான டாக்டர் அப்துல் அஸீPஸ்; ,ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பந்துல எகோடகே,ஏற்றுமதி அபிவிருத்தி சபை பணிப்பாளர் நாயகம் திருமதி சுஜாதா வீரகோன,;ஏற்றுமதி அபிவிருத்தி சபை நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் யூசுப் மரிக்கார்,ரப்பர் தொழில் மற்றும் இறப்பர் ஏற்றுமதி சமூகத்தின் அர்ப்பணிப்பான உறுப்பினர்கள,; அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் மற்றும் வல்லுனர்கள,; அழைப்பாளர்கள் றப்பர் தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசு அதிகாரிகள் விசேட அதிதிகள் என பலர் கலந்துக்கொண்டனர் என பலர் கலந்துக்கொண்டனர்
விசேடமாக 28 நாடுகளில் இருந்து 250 பிரதிநிதிக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
இங்கு அமைச்சர் ரிஷாட்; பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்:
முதல் முறையாக, இன்று இலங்கையில் நடைபெறுகின்ற முன்னோடியான உலகளாவிய ரப்பர் மாநாட்டில், உங்கள் அனைவரையும் சந்திப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொழில் துறை பேச்சாளர்கள் இ நிபுணர்கள், மற்றும் உலக பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளும் இந்ந சாவதேச நிகழ்வு உலக ரப்பர் தொழில் துறைக்கு ஒரு தளமாக அமைவதால் இந்நிகழ்வில் கலந்துக்கொள்வதற்கு தவறிவிடக்கூடாது என்பது தெளிவாக தெரிகின்றது.
மேலும் முக்கியமாக, வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை திகழ்வது என்பது இலங்கைக்கு ஒரு மரியாதை ஆகும்.
வரலாற்று ரீதியான இந்த சர்வதேச நிகழ்வினை கொழும்பில் நடத்த மலேஷியாவை தளமாக கொண்ட சர்வதேச நிகழ்ச்சி அமைப்பாளர்களான ‘ஊழகெநஒhரடி’ யினருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினர் ஓர் இணை அமைப்பாளராக கூட்டிணைந்து ஒழுங்கு செய்துள்ளனர்.
உள்ளூர் மற்றும், சர்வதேச இயற்கை ரப்பர் துறைகள் மீதான சமீபத்திய ஊக்குவிப்பு அறிக்கைகள் இந்த நிகழ்வை நடத்த மேலும் முன்னெடுத்துள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பிலான 2105 ஆம் ஆண்டுக்கான அவரது கடந்த வார வரவுசெலவுத்திட்டம் உள்ளூர் அறிக்கைக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்திருந்தது. இதன் மூலம், ஒரு கிலோவுக்கான ரப்பரின் நிலையான உறதிப்படுத்தப்பட்ட விலை 300 ரூபாவாகவும் மற்றும் ரப்பர் இறக்குமதி மீதான செஸ் வரியினை 10 ரூபாவாகவும் அதிகரித்தமைக்கு ரப்பர் தொழில் துறை சார்பாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எங்கள் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது.
ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும். இலங்கையில் இத்தகைய சிறிய விவசாயிகளினால் மொத்தமாக 65 சதவீதமான றப்பர்பயிர் சொந்தமாக நாட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
எனவே இ இலங்கை – நாட்டின் வரலாற்று புகழாக காணப்பட்ட இயற்கை றப்பர்; தவிர இந்த துறையில் அதிகரிக்க சமூக பொருளாதாரமும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.
2013 ஆம் ஆண்டில்; இலங்கை 72 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயற்கை றப்பரினையும் 887 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான றப்பர் முடிவு உற்பத்திகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு மொத்த றப்பர் ஏற்றுமதி 100 சதவீத அதிகரிப்பை காட்டியது என்பதை நான் மிகவும் சந்தோஷத்துடன் தெரிவிக்கின்றேன.;
இத்தகைய ஒரு பின்னணியில், கொழும்பில் நடைபெறும் உலக றப்பர் மாநாடானது எங்கள் றப்பர் தொழில்துறைக்கு அடுத்த கட்டத்திற்கு முன்னேற ஒரு பெரிய வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இது எங்கள் றப்பர் தொழில்துறைக்கு ஒரு மதிப்புமிக்க உலக வளைப்பின்னலுக்கான வாய்ப்பை வழங்குவதோடு சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் கற்றுக்கொள்ளுவதற்கும் வாய்ப்;பாகவும் உள்ளது.
எனது அமைச்சு 46 ஆயிரம் டொலர்கள் செலவில் இரண்டு முக்கியமான முயற்சிகளை தொடங்கியிருக்கின்றது என்பதை தெரிவிப்பதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன.;
உலகளவில்; , இலங்கை ஆறாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் மற்றும் 8 வது இயற்கை றப்பர் உற்பத்தி நாடாகவும் உள்ளது. அதேபோல உலகளவில்; , இயற்கை றப்பர் உற்பத்தியில், இந்தியா, நான்காவது மிகப்பெரிய நாடாகவும், பயன்பாட்டில், சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்திலும் உள்ளது.
றப்பர் உற்பத்தி 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டில் 130,421 மெற்றிக் தொன்களுக்கு 14.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக முதல் ஒன்பது மாதங்களில் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியானது பால் எடுக்கும் நாட்களைக் குறைவடையச் செய்தது.இக்காலப்பகுதி முழுவதிலுமான பலத்த மழைவீழ்ச்சி பெருமளவு ஏற்பட்டதாகும்.
மேலும் றப்பருக்கான உலகக் கேள்வி இவ்வாண்டில் மெதுவடைந்தமை விலைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பெரும்பாலும் லேற்றெக்ஸ் கிறேப் என்பதனை உள்ளடக்கிய றப்பர் ஏற்றுமதிகள் 2013 ஆம் ஆண்டில் 23, 580 மெற்றிக் தொன்களுக்கு 37 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த வேளையில் உள்நாட்டு றப்பர் நுகர்வுவின் பங்கு 2012 ஆம் ஆண்டு 72 சதவீதத்திலிருந்து (110,038 மெற்றிக்தொன்கள்) 2013 ஆம் ஆண்டு 82 சதவீதத்திற்கு (107,259 மெற்றிக் தொன்களுக்கு) அதிகரித்தது. உலகின் மொத்த றப்பர் விநியோகத்தில் இயற்கை றப்பர் உருவாக்கம் மூன்றில் ஒரு பங்காக இருப்பது நாம் அறிந்த விடயமாகும்
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இத்துறையில் வேலைவாய்ப்பு விகிதங்கள் கணிசமாக இருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும.;
எனவே இ இலங்கை – நாட்டின் வரலாற்று புகழாக காணப்பட்ட இயற்கை றப்பர்; தவிர இந்த துறையில் அதிகரிக்க சமூக பொருளாதாரமும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.
கொழும்பில் நடைபெறும் உலக றப்பர் மாநாடு; எங்கள் றப்பர் தொழில்துறைக்கான அடுத்த நிலைக்கு நுழைவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு காணப்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்த நிகழ்வு கூட எங்கள் றப்பர் தொழில் துறைக்கு மதிப்புமிக்க உலக வளைப்பின்னலுக்கான வாய்ப்பை வழங்குவதோடு சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் கற்றுக்கொள்ளவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
இறுதியாக , அதி ஈடுபாடு கொண்டு இந்த நிகழ்வினை முதல் முறையாக இலங்கைக்கு அறிமுகம் செய்த இணை அமைப்பாளர்களுக்கு என நன்றயினை தெரிவித்தக்கொண்டு இந்த சந்தோஷமான நாளில் பாரிய வெற்றியினை ஈட்டிக்கொள்வதற்கு எனது வாழ்த்துக்கள் என்றார் அமைச்சர்.
உண்மையில் சர்வதேச அளவில் றப்பர் மையமாக இலங்கை திகழவுள்ளமை பாரட்டத்தக்கது என வாஷிங்டனை தளமாக கொண்ட உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியல் அபிவிருத்தி வாய்ப்பு குழுவின் அலுவலகர் ஜோன் பவர்ஸ் இந்த நிகழ்வில் போது சுட்டிக்காட்டியிருந்தார்.