வரலாற்று வீரா்களின் வரிசையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் ஒமல்பே தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
30 ஆண்டு காலமாக நீடித்து வந்த போரை ஜனாதிபதி நிறைவுக்குக் கொண்டு வந்தார். கடந்த காலங்களில் ஆட்சி வகித்த ஜனாதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரபாகரனை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்து தேசத்தின் எதிர்காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
அதிகாரத்தை தேவையின்றி பயன்படுத்தாது தூய்மையான அரசியலில் ஜனாதிபதியை ஈடுபடச் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறைகள் இன்றி தூய்மையான முறையில் நாட்டை ஆட்சி செய்ய அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது. இதன் காரணமாகவே அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜாதிக ஹெல உறுமய கட்சி முன்வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.