வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும்.
இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக சாலை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் தொடக்கம் இந்த வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் சாலை வரியும் சேர்த்து அறவிடப்படவுள்ளது.
பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வாக்களித்து பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் , வரி அதிகரிப்பின் மூலமாக பொதுமக்களை வாட்டி வதைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருப்பது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.