Breaking
Mon. Mar 17th, 2025
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் கடந்த ஒன்பது நாட்கள் காலை 9.30 முதல் மாலை 6.30 வரையில் நடைபெற்று வருகின்றது.

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 19ம் திகதி மாலை வரை நடைபெற்று மாலை 5.00 மணிக்கு வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் நடைபெறவுள்ள வாக்கெடுப்பிற்கு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

By

Related Post