Breaking
Mon. Dec 23rd, 2024

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் பொது மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனவா? இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளதா? என அறிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்து மாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கொழும்பு பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் சோஷலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அண்மையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலுவு திட்டம் ஒப்பீடு செய்யு முறையாக முன்வைக்கப்படவில்லை.

இந்த வரவு செலவு திட்டத்தை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட குழுவினரே பங்களிப்புச் செய்துள்ளனர். அதனால் இதனை சிறந்த வரவு செலவு திட்டம் என எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இது தனியான ஐக்கிய தேசிய கட்சியின் இடைக்கால வரவு செலவு திட்டமாகவே அமைந்துள்ளது. அதேபோல் வரவு செலவு திட்டத்தை முன்வைக்கும் முன்னர் மக்களின் அபிலாசைகளுக்கு நிவாரணமாக வரவு செலவு திட்டம் அமையுமா? என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் நாம் ஏற்படுத்த கோரிய வரிக் கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் சூட்சுமமான முறையில் மக்களுக்கு வழங்கிய நிவாரணங்களை வரிகள் ஊடாக மீளபெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்துள்ளது.

எவ்வாறாயினும் எமக்கு தேசிய அரசின் வரவு செலவு திட்டம் தொடர்பில் திருப்திகொள்ள முடியாதுள்ளது. அதனால் அரசாங்கம் முன்வைத்த வரவு செலுவு திட்டம் தொடர்பில் மக்கள் திருப்தி அடைந்துள்ளனரா? என்பதை அறிய சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.

மறுபுறம் குறித்த வரவு செலவு திட்டத்தின் மூலம் பெரும் கம்பனிகள் மட்டுமே வலுவடையும் மத்தியதர வகுப்பு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் நிலையும் உள்ளது.கீழ்மட்ட மக்கள் பற்றி ஒருபோதும் ஜக்கிய தேசிய கட்சி கருத்திற்கொள்ளாது என்பதை மீண்டும் இந்த வரவு செலவுத்திட்டம் உறுதிசெய்துள்ளது.

வரவு செலவு திட்டத்தில் நிவாரணத்தை எதிர்பார்த்த குறை வருமானம் பெறும் மக்களை ஏமாற்றி வெளிநாட்டு முதலீட்டாளார்களுக்கான நிலக் கொள்வனவு மத்தியஸ்த தளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. அதனால் தற்போதைய தேசிய அரசாங்கமும் அதன் வரவு செலவு திட்டமும் நீண்டகாலம் நிலைக்காது என்றார்.

By

Related Post