Breaking
Sun. Dec 22nd, 2024
வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிப்பது என சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.

தேசிய ரீதியில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் போது அரசாங்கத்தின் கூட்டணி கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூட்டாக இணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

இதன்படி வரவு செலவுத் திட்டத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்திக்கொண்டு அரசாங்கத்தை முன்னெடுப்பதே கட்சியின் நோக்கம் என குறித்த சிரேஸ்ட உறுப்பினர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

By

Related Post