Breaking
Mon. Dec 23rd, 2024

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் கட்டமைப்பின் கீழும் பிரதமர் செயலகத்துடன் இணைந்தும் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை தகவல்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பொறிமுறைகளை செயற்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையையும், துல்லியத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடு மிகவும் அவசியமாகும். அந்த வகையில் அரசாங்கதின் உத்தியோகபூர்வ தகவல்களையும் பாதுகாப்பு விவகாரங்களை உறுதிப்படுத்தும் வகையில்  தேசிய ஊடக மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. முழுமையான , நம்பகரமான, சரியான உத்தியோகபூர்வ  தகவல்களை மக்களுக்கு உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பது அரசின் முக்கிய பொறுப்பாக இருப்பதுடன் அதன் ஒரு நடவடிக்கையாகவே அண்மையில் தகவல் அறியும் சட்டமூலத்தையும்  அமுல்படுத்தியுள்ளோம்.

எவ்வாறு இருப்பினும் இதன் அடுத்த கட்டமாகவே பொதுமக்களின் கருத்துக்கள்  மற்றும் பங்களிப்பின் மூலமாக அரசாங்கத்தின் கட்டமைப்பின் உபாய ரீதியிலான தகவல்கள் சென்றடைவதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பிலான யோசனைகளை அமைச்சரவையில் முன்வைத்தார். இப்போது அந்த யோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  மேலும் ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் அலுவலகம் மூலமாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சரியான வேலைத்திட்டம் ஒன்றையும் கட்டமைப்பையும் உருவாக்கும் வகையில் ஆராய்ந்து வந்தோம்.

இப்போது அதற்கான கட்டமைப்பை பூரணப்படுத்தியுள்ளோம். தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் ஊடாக இந்த ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் இயங்கும். எனினும் இந்த தேசிய ஊடக மையம் சுயாதீனமான அமைப்பாகும் என்றார்.

By

Related Post