Breaking
Sun. Dec 22nd, 2024

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், தினமும் ஆறு வாய் புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஆயிரத்து 888 ஆண்களும், 534 பெண்களும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிலை, புகையிலை, புகைத்தல் மற்றும் மதுபானம் போன்ற காரணங்களினால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய் புற்றுநோய் தொடர்பான நோய் குணங்குறிகளை அறிந்துகொள்ள தேவையான வசதிகளை சிகிச்சை முகாம்கள் கொண்டிருப்பதாக சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாரஹென்பிட்டியில் உள்ள புற்றுநோய் குணங்குறிகளை அறியும் மையத்திலிருந்து பொதுமக்கள் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

By

Related Post