கொழும்பு மேல்மாகாண நுண்வரைகலை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதான மன்றத்தின் (ஜாதிக சமகி சங்கமய) வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வானது இலங்கை குடியரசு தினம் (மே 22), சர்வதேச உயிரியல் பல்வகைமை தினம் (மே 21), உலக கலாச்சார தினம் (மே, 22) ஆகிய தினங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரன்பண்டா ஜெயவர்தன, வரவேற்றார். இதேவேளை, இங்கு உரை நிகழ்த்திய செயலாளர் ஹெட்டியாராச்சி, நல்லிணக்கத்தின் அவசியம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து சுட்டிக்காட்டினார்.
மேற்படி நிகழ்வில் மதகுருமார்கள், அதிதிகள், பல்வேறு மன்றங்களை பிரநிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.