குவைத் அரசுக்கு நன்றி !
குவைத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து
சிறைகளிலும், இந்திய தூதரக பாதுகாப்பிலும், அது மட்டுமின்றி வெளியிலேயும், மறைமுகமாகவும் பணி புரிந்தும் வருகின்றனர்
தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வரும்
நம் தமிழ் சொந்தங்கள் நமது நேரடி பார்வையில் உள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்ற இவ்வேளையில்
குவைத் அரசு ரமலானை முன்னிட்டும் , மன்னர் மனித நேயர் என்ற விருதை வாங்கிய மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாகவும் பொது மன்னிப்பு என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது
இதற்காக குவைத் அரசுக்கும்
இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
குவைத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இந்த தகவலை கொண்டு சென்று தமிழ் உறவுகள் அனைவரும் நல்ல விதமாக பிரச்சினையின்றி தாயகம் செல்ல உதவ வேண்டும்
தமிழ் உறவுகளுக்கு உதவும் முயற்சியாக அமைப்பை சார்ந்த யாரேனும் ஒருவரை நியமித்து அவர்களுக்கு வழி முறைகளை சொல்லி சிக்கல் இல்லாமல் செல்ல உதவ முன் வர வேண்டும்
பெரும் பாலும் இது தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளால் தான் செய்ய முடியும்
இந்த அறிய வாய்ப்பை நாம் பயன் படுத்தி கொண்டு உதவ வேண்டும் என்ற தகவலை அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்
என்றும் சமுக நல பணிகளில்
நெல்லை பீர் மரைக்காயர்
மண்டல செயலாளர்
AIMIM கட்சி ,குவைத்