தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாவனையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் அவர்களை ஏமாற்றும் வர்த்தகர்களை மடக்கிப் பிடிக்க பாவனையாளர் விவகாரங்களுக்கான அதிகாரசபை ஏப்ரல் 11 ஆம் திகதி வரை சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி மொத்த, சில்லறைகடைகள் மற்றும் களஞ்சியசாலைகளில் சோதனை நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாவனையாளர்களை பண்டிகைக் காலத்தில் ஏமாற்றும் வர்த்தகர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக பொதுமக்கள் 011-2399149, 011–7755481 – 3 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யலாம்.