Breaking
Mon. Dec 23rd, 2024

பம்­ப­லப்­பிட்டி கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஹமட் சியாமை படுகொலை செய்தல், கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பத்து குற்றச்சாட்டுக்களில் ஏழு குற்றச்சாட்டுக்கள், வாஸ் குணவர்தனவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொஹமட் சியாம் கடந்த 2013ம் ஆண்டு மே 22 ம் திகதி பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு, தொம்பே பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

By

Related Post