Breaking
Fri. Nov 15th, 2024
கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

2013 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2013 மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முத்தலீப். கம்மத தடயக்கார கோரலகே கிருஷாந்த விஸ்வராஜ் ஆகியோருடன் இணைந்து கொலை திட்டமிடல் மற்றும் கொலை செய்தல் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.

வாஸ் குணவர்தன, இந்திக்க பமுனுசிங்க, காமினி சரத்சந்திர, ஆனந்த பத்திரனகே சஞ்சீவ, ரஞ்கன திஸாநாயக்க மற்றும் ரவிந்து குணவர்தன ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாவர்.

மேல் நீதிமன்ற நீதவான்களான லலித் ஜயசூரிய, குஸலா சரோஜனி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகியோர் இந்த வழக்கை விசாரணை செய்தனர்.

ஒரு வருட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படவுள்ளது.

உண்மையான குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க துஆ செய்து கொள்ளுங்கள்.

By

Related Post