Breaking
Sat. Nov 23rd, 2024

மண்கும்பான் வேலனை பகுதிக்குரிய, ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை பகுதியில் இருந்து வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு தினமும் நடையாக சென்று கல்விகற்றுவந்த பரிதாப நிலை யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ K.M நியாஸ் (நிலாம்) அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த மாணவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவி புரிந்து சிறப்புக்குரிய கல்வியை தொடர வழிவகுக்கவேண்டும் என்ற அவரது தூய்மையான மனப்பாண்மைக்கு அமைய உரியவர்களை தொடர்புகொண்டு எடுத்த அவரது தனிப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

பிரபல வர்த்தகர் கயிற்று கடை “ராசன்” என்பவரை தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூரியதுக்கு இணங்க, அவரது மாமனார் காலம் சென்ற கை.கனேசையா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் மேற்படி குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கரவண்டி ஒன்று 2019.02.18 நேற்று பி.ப 6.௦௦ மணியளவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்திகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களான நூர்தீன் சம்சுன் மற்றும் சுனீஸ் சுவர்கஹான் கலந்து கொண்டனர்

Related Post