உலகிலிருந்து வறுமையை ஒழித்து சிறப்பான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு பயன்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இந்த மகாநாட்டை நடாத்துவதற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்மைக்கு தான் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த மகாநாட்டில் 23 நாடுகளைச்சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்குகொண்டுள்ளனர். மகாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று சர்வதேச மகாநாடு ஆரம்பமானது. இதில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றினார். உலகில் உள்ள இயற்கைவளங்களையும் உயிரினங்களையும் பாதுகாக்க மக்கள் தத்தமது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்துவதின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.