Breaking
Mon. Dec 23rd, 2024

பெறுமதிசேர் வரியை (வற்) 15 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (நேற்று) நள்ளிரவு வெளியிடப்படும்’ என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ‘வற் அதிகரிப்பு யோசனை, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்ட பின்னர் அது நடைமுறைக்கு கொண்டு வருதல்’ என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதுடன், இரண்டு வார காலத்துக்குள் வற் அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த வரி அதிகரிப்பானது நிலையானது அல்ல, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றினால் வழங்கப்படும் கடன் தொகை கிடைத்தவுடன் விரைவில் இந்த வரி விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ள 15 சதவீத வற்-இல் உள்ளடங்கும் மற்றும் உள்ளடங்காத பொருட்கள் மற்றும் சேவைகளை ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க  வாசித்துக் காட்டினார்.

அதன்படி, வருடத்தின் மொத்த வருமானமாக 50 மில்லியன் ரூபாய் அதாவது காலாண்டு வருமானம் 12.5 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக காணப்படும்  மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இந்த புதியப் வரிக்குள் உள்ளடக்கப்படுகின்றன.

நோய்களை கண்டறியும் சோதனை, வைத்திய ஆலோசனை சேவைகள், வெளிநோயாளர் சேவை, ஆகியவை தவிர்ந்த ஏனைய, தனியார் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார சேவைகளுக்கும் இந்த வற்க்குள் உள்ளடக்ககப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு சேவை, புகையிலை உற்பத்தி, சீனி அல்லது ஏனைய பாணி உள்ளிட்ட இனிப்பு சேர்க்கப்பட்ட பால்மா என்பனவும் புதிய வற் வரி விதிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அத்துடன், இலங்கையிலுள்ள விமான நிலையங்களிலிருந்து, இலங்கைக்கு வெளியே காணப்படும் விமான நிலையங்களுக்கு செல்கின்ற விமான பயணிகளின் அனுமதிச்சீட்டு கட்டணமும் புதிய வற் திருத்தத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் வசதிகள்  உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு மருந்து மற்றும் சேவைகளுக்காக விலைகளை நிர்ணயிக்கப் போவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

By

Related Post