Breaking
Mon. Dec 23rd, 2024

பொருளாதாரம் தொடர்பான வல்லுனர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (04) அளவில் வற் (VAT) வரியை சீரமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (29) கிராந்துருகோட்டை, மஹாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதுளை மாவட்ட சிறுநீரக நோயாளர்களுக்கு உதவியளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று, வரிச் சலுகை கொண்ட வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரத்தை (Permit) பெறத் தகுதியான சகல அரச ஊழியர்களுக்கும் புதிதாக வாகன கொள்வனவுப் பத்திரம் வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் ஒப்பந்த காலம், இன்று (30) நிறைவடைவதால் இன்னும் சில மணித்தியாலங்களில், புதிய ஆளுநரை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

#Thinakaran

By

Related Post