வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான வற்வரி அதிகரிப்பு திருத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் அமைச்சரவையில் நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த வகையில் அமைச்சரவையானது வற்வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் இந்த உத்தேச திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் மாதம் 12 மில்லியன் மற்றும் ஒரு நாளைக்கு 33 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறும் வர்த்தகர்கள் வற்வரிக்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாதம் ஒன்றுக்கு 50 மில்லியன் ரூபா பெறும் வர்த்தகர்கள் வற்வரிக்கு உட்படுவதாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
தற்போது உரிய விதிமுறைகளைப் பின்பற்றி வற்வரி அதிகரிப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.