Breaking
Mon. Dec 23rd, 2024

வற் வரி தொடர்பில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேலும் 1100 அரச அதிகாரிகள் வேலைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என  அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் சில பிரதேசங்களில் அநீதியான முறையில் விலை  அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றினை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் எவற்றுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. அவ்வகையில் வற்  வரி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவற்றுக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் செயலணி அமைக்கப்படவுள்ளதுடன் அவற்றினை  நடைமுறைப்படுத்தும் வகையில் நுகர்வோர் அதிகார சபையின் கீழ் இந்த செயலணி அமையவுள்ளது.

அதனை முன்னிட்டு தற்போது கடமையிலுள்ள அதிகாரிகளை விட  மேலும் 1100 அதிகாரிகள் கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

By

Related Post