Breaking
Mon. Mar 17th, 2025

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார்கள். இதன்போது அவ் வரியில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்  என்று அரசாங்கம் தெரிவித்தது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அறவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அரசாங்கம் அறிவித்தது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

By

Related Post