ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீதமாக அதிகரிக்கப்படவிருந்த பெறுமதி சேர் வரி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வரி அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ள விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மறு அறிவித்தல் வரை முன்னர் இருந்தது போன்று 11 சதவீதமான பெறுமதி சேர் வரியே நடைமுறையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீதமாக வரியை அறிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக அதிகரிப்பதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே இதற்கு தொழிலாளர், மற்றும் தொழிற்சங்கங்களிடமிருந்தும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரிட மிரும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.