Breaking
Mon. Dec 23rd, 2024
சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

By

Related Post