Breaking
Mon. Nov 18th, 2024
இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்திவாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு சபை அதன் கதவுகளை திறந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாகும்.   உலக மற்றும் வரலாற்று பிரசித்திபெற்ற சிலோன் தேயிலை மற்றும் இலங்கையின் ஏனைய உற்பத்திகளினை கொண்டு  உடனடி பயனாளிகளாக முன்வாருங்கள் என  ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சின் அரச விவகாரங்களுக்கான தற்காலிக துணைச்செயலாளர் டாக்டர் மொகமட் பின் அவாத் அல் ஹசன் கூறினார்.
கடந்த வாரம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடான விசேட சந்திப்பொன்றின் போது அவர் இதனை கூறினார்.
தொடர்ந்து இச்சந்திப்பில் டாக்டர் மொகமட் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
சோஹார் துறைமுக நகரம்  ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கினை மையமாக கொண்ட நாடுகள் மத்தியில் ஏற்றுமதிக்கு அப்பால் இலங்கையின் முக்கிய உற்பத்தி மற்றும் மீள் ஏற்றுமதி மீது  பன்மடங்கு நன்மைகள் கிடைத்திருக்கின்றன.
சோஹார் , அல்சுனா, சாலலா, டெகம் என்பன  ஓமன் நாட்டின் நான்கு பிரசித்திபெற்ற சுதந்திர பொருளாதார வளையங்களாகும். சோஹார் துறைமுக நகரம் மற்றும் சுதந்திர பொருளாதார வளையம் ஊடான புதிய கட்டத்தில்  சிலோன் தேயிலையின் மைய  சாத்தியங்களைப் பற்றி நாம் கலந்துறையாட விரும்புகின்றோம். வளைகுடா ஒத்துழைப்பு சபை, இந்திய உபகண்டம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பிராந்தியங்களில் உங்களுடைய சிலோன் தேயிலை மற்றும் மீள் ஏற்றுமதியினை செயல்படுத்தி கொள்ளலாம். சோஹாரில் இருந்து இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிகளுக்கு வளைகுடா பிராந்தியத்தின் 3.5 பில்லியன் வாடிக்கையாளர்களை நேரடியாக எட்ட முடியும்
சோஹார் துறைமுக நகரம் 11000 க்கும் மேற்பட்ட ஏக்கரை கொண்டதாகும். (4500 ஹெக்டேர்) இதன் முதல் கட்டம் நிறைவடைந்தருணம் கிட்டத்தட்ட 16 உலக நிறுவனங்களால் இடவசதி எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு  இரண்டாம் கட்டத்தில் பரந்த இட அளவு உபயோகப்படுத்தக்கூடியதாக உள்ளது.  நாம் 100 சத வீத உரிமையை அனுமதிக்கின்றோம். இங்கு பூஜ்ய சுங்க வரிகள் மற்றும் பெரிய வரி விலக்குகள் காணப்படுகின்றது.
மிக முக்கியமாக, நாம் தொழிலாளர்களுக்கு கடுமையான விதிகள் சுமத்துவதில்லை. இங்கே ஓமான் குடிமக்களை மட்டுமே நாம் தொழிலாளர்களாக நியமிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால்  சோஹார் துறைமுக நகரில் உங்கள் ஏற்றுமதி திட்டங்களுக்கு உங்களுடைய சொந்த நாட்டு தொழிலாளர்கள் கொண்டு வரமுடியும். சோஹாரில்  உங்கள் தொழிலாளர்களில் 10% சதவீதம் மட்டுமே ஓமனி தேசிய பிரஜைகளாகவும் ஏனைய  90% சதவீதம் இலங்கையர்களாகவும் இருக்க முடியும். அதனால் சோஹார் துறைமுக நகரம்  ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபை மத்தியில் ஏற்றுமதிக்கு அப்பால் இலங்கையின் முக்கிய உற்பத்தி மற்றும் மீள் ஏற்றுமதி மீது  பன்மடங்கு நன்மைகள் கிடைத்திருக்கின்றன. இந்த நேரத்தில் நான் சிலோன் தேயிலை பற்றி மட்டுமே பேச காரணம் இலங்கை ஏற்றுமதியில் சிலோன் தேயிலை மத்திய கிழக்கு நாடுகளில்; நன்கு அறியப்பட்டதாகும். ஆனால் நீங்கள் சோஹார் வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கைக்கான வர்த்தக தொகுதியொன்றை நிறுவுவதற்கு வரவேற்கிறேன.;  அச்சந்தையில் உங்கள் நாட்டின் உற்பத்தியான றப்பர்,பிளாஸ்டிக், மட்பாண்டம், உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், உலோகப்பொருட்கள், இரும்பு ஆகியவற்றிற்கான வர்த்தக செய்ற்பாட்டை  பயன்படுத்தி கொள்ள முடியும்.
வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தை வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.  சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியில் ஓமன் வர்த்தக துறையில் ஒரு முதன்மை நாடாக செயற்படுவதுடன் இந்நாடுகளை விட 70 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகப்படியான வருமானத்தினை ஈட்டியுள்ளதாக  மதிப்பிடப்ட்டுள்ளது.
இந்த விசேட சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்:
ஆறு மாதத்திற்கு முன்னர் நான் ஓமன் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த வேளை வளர்ச்சிமிக்க வர்த்தகம் தொடர்பில் கலந்தறையாடினேன். மத்திய கிழக்க நாடுகள் மத்தியில் சிலோன் தேயிலைக்கான  மையமாக ஓமன் இருக்க முடியும் என நான் நம்புகிறேன். நீங்கள் இங்கு கொண்டு வந்துள்ள மகிழ்ச்சிகரமான நற்செய்தியினை எமது நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  எங்களது ஏற்றுமதியாளர்களுக்கும் தெரிவிக்கவுள்ளேன்.
இந்த வாய்ப்பு எமது வரலாற்று பழமைவாய்ந்த சிலோன் தேயிலைத் தொழிற்துறைக்கு ஒரு சிறந்த நல்லதொரு செய்தியாகும்.  உண்மையில், சிலோன் தேயிலைத் தொழில்துறை இப்போது குறைசெலவுக்கான நவீன முறை தேவைபாடுகளின் நுழைவுகளை உருவாக்க உதவுகிறது.
இதேவேளை தெற்காசிய சந்தையில் 1.7 பில்லியன் கொண்ட மையத்தில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான எங்களுடைய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை பயன்படுத்தி இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஒமனிய நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் அழைக்கின்றேன்.
ஓமன் – இலங்கை இருதரப்பு வர்த்தகம் ஒழுங்கற்றதாக காணப்படுவதால் எங்களது உறவுகளை மேலும் வலுப்படுத்தி வர்த்தகத்தை உயர்த்துவதற்கான தருணம் நெருங்கியுள்ளது. 13 மில்லியனுக்கும் அதிகமான எமது உற்பத்திகள் ஓமன் நாட்டினுடாக மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களை எட்ட முடியும்
வர்த்தகத் திணைக்களத்தின் புள்ளிவிபரப்படி, ஓமன் மற்றும் இலங்கைக்கிடையிலான வருடாந்த இருதரப்பு வர்த்தகம் மொத்தமாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டுள்ளது. எனினும் இது ஒரு ஒழுங்கற்ற மாதிரியினை காட்டுகின்றது. ஓமான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை பெற்றோல் எண்ணெய்கள் ஆகும், அதே நேரத்தில் ஓமானிற்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிகள் மின்னியல் உற்பத்தி பொருட்கள்  மற்றும் தேங்காய் ஆகும்.
இலங்கை மற்றும் ஓமன் இரு நாடுகளும் ‘இந்திய சமுத்திர ரிம்’ அமைப்பின்  உறுப்பினர்களாவர்.
மேற்படி இச்சந்திப்பினை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல வழிகளிலும் காணப்படுகின்ற ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் றிஷாட்

பதியுதீன் மற்றும் துணை செயலாளர் அல் ஹாசன் இருவரும் ஆலோசனை நடத்தினர்.IMG_1191

Related Post