ரொம்ப நாட்களாக, வளைகுடா நாட்டு “ஹவுஸ் டிரைவர்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் . இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது .பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம் இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ் டிரைவர் வேலை
1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் .
2-கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி கூப்பிட்டாலும் செல்ல வேண்டும் .
3- நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் வரும்போது நம்ம எல்லாம் நம்ம நண்பர்கள் ரூம்ல போய் பல விதமான சாப்பாடு சாப்ட்டு அங்க அரட்டை அடுச்சு அன்றைய தினத்தை கழிப்போம். ஆனால், அவர்களுக்கு அன்றைய தினம்தான் அதிக வேலை இருக்கும் .
4-அவர்களுக்காக குடுக்கப்பட்ட படுக்கைஅறையின் அளவோ மிகச்சிறியது அதற்குள்ளே கிச்சனும் ,பாத்ரூமும் ,அடங்கிவிடும் 3பேர் சேர்ந்து உக்காந்து சாப்பிட கூட முடியாது .
5-ஊரில் எந்த பிரச்சினை இருந்தாலும் அவர்களுக்கான விடுமுறை மாதம் இங்கு மதரசா (பள்ளிகூடங்கள் )விடுமுறை விடும் மாதங்கள் மட்டுமே .
6-நமக்கு எதுவும் மனக்கஷ்டம் வந்தால் நமக்கு அதை உடனே மற்றவர்களிடம் பறிமாற சந்தர்ப்பம் உண்டு ஆனால் அவர்கள் சங்கடம் வந்தாலும் ,சந்தோஷம் வந்தாலும் தானே சிரித்து,தானே சங்கடபட வேண்டும் .
7-அவர்களுக்கு கிடைக்கும் அந்த 2மாத விடுமுறை கொண்டு குடும்பத்தாரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் .
8-எவ்வளவு தான் பட்ஜெட் போட்டுபணத்த சேமிச்சு வச்சாலும் ஊருக்கு போகும் போது நண்பர்கள் கிட்ட கடன் வாங்கிட்டு போறது .
9-25வயசுல வேலைக்கு வந்து தனது ஆயுளை (50வயசுவரை) கழிப்பவர்
10-அவர்கள் ஓட்டும் கார்களின் நிறங்களும் ,உருவங்களும் மாறிக்கொண்டே இருக்கும் …ஆனால் பலரின் வாழ்க்கைத்தரம் மாறுவதே இல்லை .
இன்னும் பல……
“அவர்களுக்கு எனது கம்பீரமான சல்யூட்” . .
இதில் 100ல் 95%….இந்த பதிவு பொறுந்தும் .