Breaking
Fri. Nov 22nd, 2024

வழக்கு விசாரணை தாமடைவது தனிப்பட்டவர்களுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் பாதிப்பாகுமென்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் புவனேக அலுவிகார (Priyasad Depp and Buwaneka Aluwihare) ஆகியோர் தலைமையில் வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பி்ட்டார்.

வழக்கு விசாரணை தாமதமடைவது குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். நீதியமைச்சு கொழும்பு சட்டத்தரணிகள் கழகம் உள்ளிட்டவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய நீதி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர், சட்டத்தரணி, தமது ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய சரியான சந்தர்ப்பம் வாடிக்கையாளர் முன்வைக்கும் வழக்கை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

By

Related Post