பொதுத் தேர்தல் கால எல்லைக்குள் ஆலயம் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல் போன்ற சமய ஸ்தாபனங்களில் அரசியல் கூட்டங்கள் நடாத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதி முறைகள் இம்மாதம் 6ம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
அரச உற்சவங்களின்போது தேசியக் கொடி, மாகாணக் கொடி போன்றவைகளை ஏற்றுவதல் லமால் ஏனையவைகளைத் தேர்தல் காலத்தில் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
பாடசாலை உற்சவங்களிலும் கூட அரசியல் உரை நிகழ்த்துவது தவிர்க்கப்பட வேண்டு மென்பதுடன் அரசாங்க அபிவிருத்தி நடவடிக் கைகளின் போது பூர்த்தி செய்யப்பட்ட வேலைத் திட்டங்களைத் திறந்து வைக்கும் விழாக்கள் நடத்திட தடையேதும் இல்லை. அரசியல் இலாபம் நோக்கி புதிதாக வேலைத் திட்டங்கள் ஆரம்பித்தல் உபகரணங்கள் விநியோகித்தல் ஆகியன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சொத்துக்களை கையாளும் போது நடைமுறையிலுள்ள தடை சட்டத் திட்டங்கள் பூரணமாக செயற்படுத்தப்படுவதுடன் இச்சட்டத் திட்டங்கள் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.