Breaking
Fri. Nov 15th, 2024
வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து நாளாந்தம் ஏழு ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும். பெறப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது.
நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்து கொண்டு சூரிய மின்கலத் தொகுதியின் கட்டிடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் முத்துமுகமது , உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Post