Breaking
Mon. Dec 23rd, 2024

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துவருவதால் பாடசாலைக்கு மேலதிக கட்டிட வசதியொன்றை அமைத்துத் தருமாறு ஊரின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர். விரைவில் அதற்கான முன்னெடுப்பை மேற் கொள்வதாக உறுதியளித்தார்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்த போதும் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையே காணப்படுவதாக அமைச்சருடனான சந்திப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. மின்சார வசதி, குழாய்க்கிணறு வசதி, விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்களின் பற்றாக்குறை மற்றும் இன்னோரன்ன தேவைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விடயங்களை தாம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தக் களந்துரையாடலில் வவுனியா வடக்கு வலையக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் ஆகியோருட்பட பல அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

IMG-20170118-WA0019 IMG-20170118-WA0018 IMG-20170118-WA0017 IMG-20170118-WA0016 IMG-20170118-WA0015 IMG-20170118-WA0014

By

Related Post