Breaking
Thu. Dec 26th, 2024

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவில் கோமரசங்குளம் பூங்கா அமைத்தல், 31 இலட்சத்து 20ஆயிரம் ரூபாவும்,
தோணிக்கல் குட்செட் வீதி முதலாம் ஒழுங்கை இணைப்பு வீதி கல்லிட்டு தாரிடல் 1கோடி 30 இலட்சம்,
நெளுக்குளம் இந்து மயானத்தில் மடம் அமைத்து ஏரியூட்டும் மேடை அமைப்பதற்கு 7 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும்,
வெங்கள செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் பஸ் நிலையக் கடைத்தொகுதி அமைப்பதற்கு 45 இலட்சம் ரூபாவும்,
வவுனியா நகர சபை பிரிவில் பட்டானிச்சூர் சிறுவர் அமைப்பதற்குமான அனுமதியினை வழங்கியுள்ளார்.
புறநெகும திட்டத்திற்கமைய மக்கள் பிரதி நிதிகள் மற்றும் அதிகாரிகள் இந்த திட்டங்கள் தொடர்பில் தேவையான அலோசனைகளை முன்வைத்தனர். இதனடிப்படையில் வவுனியா அரசாங்க அதிபர் இதற்கான அனுமதியினை கோறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post