Breaking
Mon. Jan 13th, 2025

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (18) வவுனியா, றோயல் கார்டின் மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜே. ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன், நகர சபை தவிசாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் 15 வறிய மாணவர்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் ஒரு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

(ன)

Related Post