அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, வவுனியா மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி காணப்படும் யுவதிகளுக்கான கருத்தரங்கு வவுனியா, வெங்கடேஷ்வரா மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது.
கூட்டுறவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நசீரின் வழிகாட்டலில், அமைச்சரின் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இணைப்பாளர் ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், கூட்டுறவுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சரத் ஆனந்த, நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களான ரஹீம், ஜவாஹிர், சிவாஜினி உட்பட கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட யுவதிவகளுக்கான “வரையறுக்கப்பட்ட முயற்சியாண்மை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும்” அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ன)