(வாழைச்சேனை நிருபர்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எருமை மாடுகள் திருடப்பட்ட நிலையில் பொதுமக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட சம்பவம் நேற்று (26) இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனேரி கட்டாக்காட்டுப் பிரதேசத்தில் மாடுகளை வளர்க்கும் மாட்டுப்பட்டியில் இருந்து 102 எருமை மாடுகளை திருடர்கள் திருடி நேற்று இரவு 12.00 மணியளவில் கொண்டு வரும் வழியில் ஆளம்குளம் பிரதேசத்தை அன்மித்த போது இரவில் மாடுகளை சாய்த்து வருவதால் இது திருடப்பட்ட மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் மாடுகளை சாய்த்து வந்தவர்களை விசாரித்த போது மாடுகளை விட்டு விட்டு அவர்கள் தப்பியோடி விட்டதாக பொதுமக்கள் பொலிஸில் தெரியப்படுத்தியதையடுத்து மாடுகளை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சித்தாண்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவரதும் அவர்களது மூன்று பிள்ளைகளது மாடுகள் என்றும் அவர்கள் வாழைச்சேனையில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரனை நடாத்தி வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.