17.11.2016 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் காரியாலயத்தில் வாகனேரி மீனவர்களின் பிரச்சினையை தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கலீல், மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி பரிசோதகர் திரு நெல்சன் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. எரிக்கப்பட்ட தோனிக்கு பதிலாக புதிய தோனி வழங்குதல்.
2. மீனவர்களின் தோனிகளை நிறுத்தி வைக்க தனியான இடத்தினை வழங்குதல்.
3. பதிவு செய்யப்படாத மீனவர்களை சங்கங்களில் பதிவு செய்தல்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.