Breaking
Sun. Dec 22nd, 2024

அமைச்சின் ஊடகப்பிரிவு

கொழும்பு பங்சிகாவத்தையில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களை இன்று மாலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சுற்றி வளைத்ததில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஜப்பான் ஜேர்மன் போன்ற நாடுகளின் முத்திரைகள் பதிக்கப்பட்டு விற்பனை செய்த பல இலட்சம் பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களை கைப்பற்றினர். அத்துடன் பல வரத்தக நிலையங்களில் விலைகள் பொறிக்கப்படாது விற்பனை செய்யப்பட்ட உதிரிப்பாகங்களையும் கைப்பற்றியதாக  நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலரட்ன தெரவித்தார் தெரிவித்தார்.

கைதொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கடுமையான உத்தரவின் பேரில் அதிகார சபை தொடர்ச்சியான சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் பஞ்சிகாவத்த சுற்றி வளைப்பில் கொழும்பு, கமப்ஹா, களுத்துறை அதிகாரிகள் கூட்டாக ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள் தீவிர பருசோதனைக்குட்படுத்தபபட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சந்தேக நபர்கள் மாளிகாகந்த மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related Post