Breaking
Sun. Dec 22nd, 2024
முச்சக்கர வண்டி விபத்தில் ஆறு வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

பழைய காலி வீதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று எதிர் திசைக்கு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் இருந்து சிறுமி வெளியே விழுந்துள்ளார்.

இதன் போது முச்சக்கர வண்டி சிறுமியின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்த சிறுமியின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By

Related Post