முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாது என சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த பிரசாரங்களை மேற்கொள்ளும் சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பிலே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லமுடியும், என்றாலும் அங்கே அவர்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக பெண் அதிகாரிகள் மூலம் நிகாப் அணிந்துள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார். -நன்றி D c