Breaking
Thu. Dec 26th, 2024

நன்றி நவிலல்

அன்புடையீர்,

கடந்த 01/10/2017 திகதி தொடக்கம் கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காங்கிரசின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசின் பேரில் வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

வட மாகாண சபையின் உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நீங்கள் தந்த அன்பிற்கும் அக்கறைக்கும் அயராத உழைப்பிற்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எனது பதவிக்காலத்தில் அல்லாஹ்வின் துணையோடும் கௌரவ அமைச்சரின் ஆலோசனையோடும் தொடர்ந்து எனது நற்பணிகளை முன்னெடுப்பேனென உறுதியளிக்கின்றேன்.

மீண்டும் தாங்கள் தந்த அன்பிற்கும் மகத்தான ஆதரவிற்கும் வாக்களித்தமைக்கும் நன்றி கூறி நிறைவு செய்கின்றேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்பான
வட மாகாண சபை உறுப்பினர்
அலிகான் சரீப்.

Related Post